Kathir News
Begin typing your search above and press return to search.

பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் இளைஞர்கள் காத்துக்கிடந்த படத்தை உ.பி-யில் நடந்ததாக வைரலாக்கும் ஊடகங்கள்!

Viral Image of People Sleeping on Road on a Chilly Night is not of UP TET Aspirants

பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் இளைஞர்கள் காத்துக்கிடந்த படத்தை உ.பி-யில் நடந்ததாக வைரலாக்கும் ஊடகங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  30 Nov 2021 4:31 PM GMT

உத்தரபிரதேசத்தில் தேர்வுத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ரத்து செய்தது. இந்நிலையில், சாலையில் சிலர் தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் காரணத்தால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், குளிர்கால இரவுகளில் TET தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருப்பதை படம் காட்டுகிறது என்றும் படத்தைப் பகிர்ந்து வைரலாக்கினர்.

இந்தப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடி பார்த்த போது, ராஜஸ்தானைச் சேர்ந்த வேலையில்லாத ஆண்கள் லக்னோவில் உள்ள பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் காத்திருப்பதை படம் காட்டுகிறது.





இந்த வைரலான பதிவை "போலி" என அழைக்கும் உ.பி காவல்துறை, "வைரலான புகைப்படம் UPTET போட்டியாளர்கள் அல்ல, மாறாக ராஜஸ்தானின் இளைஞர்களின் புகைப்படம். அட்மிட் கார்டின் அடிப்படையில், UPTET தேர்வர்கள் வசதியாக UPSRTC பேருந்துகள் மூலம் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள், மேலும் இந்தத் தேர்வு ஒரு மாதத்தில் மீண்டும் அரசு செலவில் நடத்தப்படும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


"ஆபன் தியோரியா" என்ற சமூக ஊடக கணக்கு முதலில் சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டதை நாங்கள் கண்டறிந்தோம். சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக அவரை கைது செய்துள்ளது. தவறான புகைப்படங்கள்/உண்மைகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உ.பி காவல்துறையின் உண்மைச் சரிபார்ப்பின் ட்வீட் குறிப்பிடுகிறது. தயவு செய்து தவறான பதிவுகளை போட்டு வதந்திகளை பரப்ப வேண்டாம்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News