போலீஸ் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை கவண் வில்லால் தாக்குவதாக பரவி வரும் வீடியோ! போலிகள் இப்படியும் வைரலாகும்!
Viral post claims Ugandan police officer attacked journalist with a catapult

உகாண்டாவில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை செய்தித் தொடர்பாளர், பத்திரிகையாளரை கவண் வில் மூலம் தாக்கியதாக சமூக ஊடகப் பதிவு ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
சனிக்கிழமை வெளியான ட்வீட்டில், புதிதாக நியமிக்கப்பட்ட உகாண்டா காவல்துறை செய்தித் தொடர்பாளர் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டதற்காக செய்தி நிருபரைத் தாக்கினார் என பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதவு 8,265 முறை மறு ட்வீட் செய்யப்பட்டது.
வைரல் பதிவுகளின் பின்னணியில் உள்ள உண்மை
உகாண்டா காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், இதனை 'போலி செய்தி' என்று முத்திரையிட்டது.
வைரலான புகைப்படத்தில் கவண் கொண்டு காணப்படுபவர், உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் பிரெட் எனகா . கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் வீடியோவில் இருந்து படம் எடுக்கப்பட்டது.
கவண்களால் பொதுமக்களை குறிவைக்கும் கும்பல்களின் தோற்றம் குறித்து பிரெட் எனகா பொதுமக்களை எச்சரிப்பதைக் காண முடிந்தது. இவ்வாறு, கடந்த ஆண்டு ஒரு கிரிமினல் கும்பலின் எழுச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உகாண்டா காவல்துறை மேற்கொண்ட முயற்சியானது, ஒரு 'புதிய' பொலிஸ் செய்தித் தொடர்பாளரால் பத்திரிகையாளர் மீது தாக்குதல் என தவறாக சித்தரிக்கப்பட்டது.