Kathir News
Begin typing your search above and press return to search.

#FactCheck : சென்னை விமான நிலைய முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன?

1. அவர்கள் மேற்கோளிட்ட கட்டுரையின் படி, அறிஞர் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப்பட்டு விட்டது.

 2. காமராஜரின் பெயர் கட்டுமான பணிகள் நிறைவு முடிந்தவுடன் சூட்டப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கொரானா காரணமாக இன்னும் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை. 

#FactCheck : சென்னை விமான நிலைய முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன?

Saffron MomBy : Saffron Mom

  |  23 Feb 2021 8:07 AM GMT

தேர்தல் வரவிருக்கும் வேளையில், செய்திகளைத் திரித்து, போலி செய்திகளை பரப்புவதற்கு சில அரசியல் கட்சிகள் தயங்குவதில்லை. தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி இன்று வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டுமான முனையங்களுக்கு அறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோரின் பெயர்கள் உள்நோக்கத்துடன் விடுபட்டுள்ளதாக ஒரு டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையை மேற்கோளிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை?

அவர்கள் மேற்கோளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திக் கட்டுரை கடந்த மார்ச் 2020 இல் வெளியானது. அந்த கட்டுரையின் தகவல்களின்படி, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் கட்டப்பட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டும் வந்தன. ஏற்கனவே உள்நாட்டு முனையம் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரிலும், சர்வதேச முனையம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பெயரிலும் பெயரிடப்பட்டிருந்தது. புது உள்நாட்டு முனையம் 2013ல் செயல்பட ஆரம்பித்தது.

விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து அறிஞர் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப்பட்டது.

ஆனால் பழைய உள்நாட்டு முனையம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் (2018) ஒன்றிணைக்கப்பட்ட முனையங்களை உருவாக்குவதற்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக கட்டப்பட்டு வரும் இந்த முனையத் திட்டம், வருட இறுதிக்குள் (2020) நிறைவடையும் எனக் கருதப்பட்டது.

Screen Shot From: Times of India article quoted by DMK IT Wing

காமராஜர் பெயர் இம்முனையத்திற்கு மீண்டும் சூட்டப்பட வேண்டும் என இந்த விவகாரத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திடம் (AAI) காங்கிரஸ் கட்சி எழுப்பிய பொழுது, முழு கட்டுமான வேலைகளும் முடிவடைந்த பிறகு காமராஜரின் பெயர் மறுபடியும் சூட்டப்படும் என்று அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குறிப்பிடுகையில், இந்த விஷயம் மறக்கப்பட்டு விடவில்லை என்றும் கட்டுமானங்கள் முடிந்தவுடன் காமராஜரின் பெயர் சூட்டப்படும் என்று தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக கூறினார்.

Screen Shot From: Times of India article quoted by DMK IT Wing

இந்த கட்டுரையில் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப் பட்டது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காமராஜரின் பெயர் மட்டுமே முழு கட்டுமானங்கள் முடிந்தவுடன் சூட்டப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் (2020) கொரானா பரவல் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கினால் வேலைகள் முடங்கின. சமூக விலகல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கட்டுமானப் பணிகள் சுணங்கின. இதன் காரணமாக 2020 கடைசியில் முடிவடைய வேண்டிய பணிகள் இன்னும் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை தாமதமாகத்தான் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் மறுபடியும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகின. எனவே இன்னும் அந்த கட்டுமானங்கள் நிறைவடையவில்லை.

எனவே, தி.மு.க தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாக இருக்கிறது.


1. அவர்கள் மேற்கோளிட்ட கட்டுரையின் படி, அறிஞர் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப்பட்டு விட்டது.

2. காமராஜரின் பெயர் கட்டுமான பணிகள் நிறைவு முடிந்தவுடன் சூட்டப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கொரானா காரணமாக இன்னும் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை.

இந்நிலையில் வேண்டுமென்றே தமிழக அரசு மீதும், மத்திய அரசும் மீது போலி புகார்களை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க தொழில்நுட்ப அணி, உண்மைகளை திரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News