Kathir News
Begin typing your search above and press return to search.

முதல் எட்டு நிமிடம் காலியா இருக்கே! பிரதமர் பேசிய வீடியோவை திரித்து செய்தி பரப்பி வரும் ஊடகங்கள்! உண்மை என்ன?

முதல் எட்டு நிமிடம் காலியா இருக்கே! பிரதமர் பேசிய வீடியோவை திரித்து செய்தி பரப்பி வரும் ஊடகங்கள்! உண்மை என்ன?
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 Jan 2022 6:37 AM GMT

உலகப் பொருளாதார மன்ற உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 17 அன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் பொருளாதார விவகாரங்கள் குறித்து என்ன பேசினார் என்பதை விடவும், தொழில்நுட்ப கோளாறால், தனது உரையை பாதியிலேயே நிறுத்திய காட்சியை காங்கிரஸ் சார்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. சமூக ஊடகப் பயனர்களில் பெரும் பகுதியினர், டெலி ப்ராம்ப்டர் செயலிழந்ததே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் உரை நிகழ்த்த முடியாது என்று பிரதமர் மோடி கேலி செய்யப்பட்டார். காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு #TelepromptorPM என்ற ஹேஷ்டேக்குடன், பிரதமர் பேசிய 37 வினாடி வீடியோவை வெளியிட்டது.

உண்மை தன்மை:

பிரதமர் மோடியின் முழு உரை யூடியூப் சேனல்களில் கிடைக்கிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) யூடியூப் சேனலில் முதல் எட்டு நிமிடம் காலியாக உள்ளது. ஆனால் DDnewsவீடியோ பதிப்பில் பிரதமர் ஏற்கனவே ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தது இடம்பெற்றுள்ளது. WEFயூடியூப் சேனலில் பிரதமரின் உரையின் ஆரம்ப பகுதி நேரலையில் ஒளிபரப்பப்படாததால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை இது தெளிவாகக் குறிக்கிறது. வழக்கமாக உலகத்தலைவர்கள் பேசும் எல்லா நிகழ்வுகளிலும், யார் யார் பங்குபெற்றுள்ளார்கள் என்பதை குறிப்பிட டெலிப்ராம்ப்டரைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு மாறானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.இடையில் பிரதமர் மோடி பேசுவதை நிறுத்தக் காரணம், நிகழ்வை நிர்வகிக்கும் குழுவினரின் குறுக்கீடுதான். குறுக்கீடு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதே தவிர, டெலிப்ராம்ப்டர் ஸ்னாஃபு அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தமிழக ஊடகங்களும் போலி செய்தியை எந்த வித சுய பரிசோதனையும் செய்யாமல் பரப்பியது குறிப்பிடத்தக்கது.












Next Story
கதிர் தொகுப்பு
Trending News