Kathir News
Begin typing your search above and press return to search.

ஏன் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதில்லை? மனதை நெகிழ வைக்கும் பின்னணி.!

ஏன் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதில்லை? மனதை நெகிழ வைக்கும் பின்னணி.!

ஏன் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதில்லை? மனதை நெகிழ வைக்கும் பின்னணி.!

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2020 11:17 AM GMT

ரஜினிகாந்தின் அரசியல் பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்து அவர் மீது பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதை தெரிவிக்கும் முன்னரே தமிழகத்தில் என்ன நடந்தாலும் "ரஜினிகாந்த் குரல் குடுக்க வேண்டும்" என சிலரின் கண்டன குரல்கள் எழுவதை நாம் கண்டுள்ளோம்.

அதே அவரின் அரசியல் வருகையை கடந்த 2017'ம் ஆண்டு "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என அறிவித்தாரோ அன்று முதல் பல விமர்சனங்கள் அதிலும் குறிப்பாக அவர் வந்தால் எந்த கட்சிக்கு பாதிப்பாக இருக்குமோ அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் விமர்சனங்களை அடுக்கிக்கொண்டே வந்தனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 12'ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்தநாளுக்கும் அவர் வழக்கம் போல் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், இல்லாமல் பெங்களூரு செல்வதாக முடிவெடுத்து கிளம்பிவிட்டார். வழக்கம் போலவும் இதே தனது அரசியல் லாபத்திற்காக அவதூறை பரப்ப துவங்கியுள்ளனர் அரசியல் கட்சிகள். அதிலும் குறிப்பாக வரும் டிசம்பர் 31'ல் அவர் கட்சி பற்றிய விவரங்களை அறிவிப்பார் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தின் கட்சி போட்டியிடும் என அவர் அறிவித்ததில் இருந்து விமர்சனங்கள் கடுமையாகியுள்ளன.

ஆனால் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளுக்கு ஏன் அவர் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இருக்க மாட்டார் என்ற காரணம் ஒன்று உண்டு. இதனை ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் எனது பிறந்தநாளுக்கு வீட்டில் இருப்பதில்லை காரணம். சில ஆண்டுகளுக்கு முன் எனது அனைத்து பிறந்தநாளுக்கும் நான் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளை எனது வீட்டில் சந்திப்பது வழக்கம்.

அப்படி ஒரு ஆண்டு எனது ரசிகர்கள் சந்திப்பிற்காக வெளியூரில் இருந்து 3 ரசிகர்கள் எனது பிறந்தநாளுக்கு வந்து சந்தித்து விட்டு சென்ற பொழுது நடந்த கார் விபத்தில் எனது ரசிகர்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவம் எனது மனதை பாதித்தது. அன்றிலிருந்து நான் எனது பிறந்தநாளான டிசம்பர் 12'ம் தேதி அன்று யாரையும் சந்திப்பதில்லை, இதை எனது ரசிகர்களின் நன்மைக்காக கடைபிடிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தனது ரசிகர்களின் நலனே தனது நலன் என்ற எண்ணத்துடன் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ஆனால் இவரின் செயலை கீழ்த்தரமான அரசியல் வாதிகள் தங்களது பதவி வெறியால் தவறான எண்ணத்தை மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News