Kathir News
Begin typing your search above and press return to search.

Fact Check என்னும் போர்வையில் தி.மு.க, தி.க. கோஷ்டிகள் அட்டூழியம் -  'மிஷன் காளி' பக்கம் முடக்கப்பட்டதன் பின்னணி.!

Fact Check என்னும் போர்வையில் தி.மு.க, தி.க. கோஷ்டிகள் அட்டூழியம் -  'மிஷன் காளி' பக்கம் முடக்கப்பட்டதன் பின்னணி.!

Fact Check என்னும் போர்வையில் தி.மு.க, தி.க. கோஷ்டிகள் அட்டூழியம் -  மிஷன் காளி பக்கம் முடக்கப்பட்டதன் பின்னணி.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Feb 2021 1:37 PM IST

ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு திருப்பி வரும் மிஷனரிகளின் கடுஞ்செயல்களை தொடர்ந்து கண்டித்து வந்த 'மிஷன் காளி' என்னும் சமூக வலைத்தளத்தை பிரிவினைவாதிகள், மதமாற்றம் செய்யும் கோஷ்டிகள் என பல்வேறு தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் கொடுத்து முடக்க நினைக்கின்றனர்.

அதனை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் மிகவும் துணிச்சலாக முறையில் மிஷனரிகளின் சூழ்ச்சிகள், பொய்யுரைகள், பித்தலாட்டங்கள், மதமாற்றபோதனைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக மக்களுக்கு இன்று வரை தெரியப் படுத்தி வருகிறது மிஷன் காளி இயக்கம்.

மேலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தி கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை தமிழ், கன்னடம், இந்தி, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மக்களுக்கு எடுத்து செல்லும், ஆன்லைன் வலைத்தளம் மிஷன் காளி இயக்கத்தால் நடத்தப்படுகிறது.

'Jesus network tv'என்னும் பெயரில் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழமையான இயேசு உருவம் பதித்த பழமையான சிலை கிழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இங்கே வாழ்ந்த இந்துக்கள் மக்கள் தாய் மதமான கிருஸ்துவ மதத்தில் இருந்து இந்துவாக மாறி உள்ளதற்கு இயேசு சிலையை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? # ஆமேன் என்னும் பொய் செய்தி ஹஸ்டாக் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது 'பொய்யான செய்தி' என்று மிஷன் காளி மக்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது. ஆனால் சிலர் இது பொய்யான செய்தி என்று ரிப்போர்ட் செய்து மிஷன் காளியை தற்காலிகமாக முடக்கி உள்ளனர். தமிழகத்தில் fact check என்னும் போர்வையில் தி.மு.க, திக, கம்யூ ஆட்கள் திட்டமிட்டே ஒரு தலைபட்சமாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News