Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்கு சதவீதம் பார்க்கத் தெரியாதா? தரவுகளை தேடி எடுக்கத்தெரியாமல் பொய் செய்தி பரப்பும் youturn ஊடகம் - அம்பலமாகும் முகத்திரை!

வாக்கு சதவீதம் பார்க்கத் தெரியாதா? தரவுகளை தேடி எடுக்கத்தெரியாமல் பொய் செய்தி பரப்பும் youturn ஊடகம் - அம்பலமாகும் முகத்திரை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2022 11:41 AM GMT

2022ஆம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களில் 1.60%, நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 1.46% , பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் 3.02% பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என மொத்தமுள்ள 12,838 வார்டுகளில் 308 வார்டு உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. அதாவது இங்கு வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் வாக்காளர்கள் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படவில்லை.

அப்படி இருக்கும் போது, ஒப்பீடு செய்கிறோம் என்ற பெயரில், youturn தமிழ் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி கடும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்த வாக்குகளில் தமிழ்நாடு பாஜக 5.33% வாக்குகளை பெற்றுள்ளதாக தமிழக பாஜகவின் சூர்யா, காயத்ரி ரகுராமன் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதன் உண்மை தன்மையை சரி பார்க்கிறோம் என்ற பெயரில், 2011ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் 2022ல் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து, பாஜக தலைவர்கள் பதிவிட்ட தகவல் பொய் என்று கூறியுள்ளது.

ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்பு என தங்களை கூறிக்கொள்ளும் ஊடகத்திற்கு, வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும், வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கும் கூடவா வித்தியாசம் தெரியவில்லை?

தவறான கணக்கீடு

2011 மற்றும் 2022 ஆகிய இரு தேர்தல்களிலும் தமிழக பாஜக தனித்து நின்றே தேர்தலை சந்தித்து இருக்கிறது. இரு தேர்தல் வெற்றி சதவீதத்தை ஒப்பிடுகையில், 1.76%-ல் இருந்து 2.39% என பாஜக 0.63% மட்டுமே வளர்ச்சியை கண்டுள்ளது. என வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்துள்ளனரே தவிர, பதிவான வாக்குகளின் அடிப்படையில் ஒப்பீடு செய்யவில்லை

அடுத்து அவர்களுடைய செய்தியின் இறுதியில், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இவ்விரண்டு தரவுகளுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கைக்கும், வெற்றிப் பெற்றவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள சதவீதம் மட்டுமே. உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர்.



தேர்தல் ஆணைய இணையதளத்தில் எல்லா தகவலும் வெளிப்படையாக பதிவிடப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு வாக்கு வாங்கினார் என்பது முதற்கொண்டு அதில் உள்ளது. அதன் அடிப்படையில் பாஜக வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையில் ஒப்பீடு செய்து பார்த்திருக்கலாம். எதுவுமே செய்யாமல், வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்ற விவரத்தோடு, ஒரு கட்சிக்கு பதிவான வாக்காளர்களின் சதவீதத்தை ஒப்பிட்டு, தாங்கள் உள்நோக்கதுடன் செயல்படுவதை அந்த ஊடகம் நிரூபித்துள்ளது.

அவர்களுடைய செய்தி இணைப்பு: https://youturn.in/factcheck/urban-election-bjp-vote.html


Next Story
கதிர் தொகுப்பு
Trending News