Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் கால் வைக்க மாட்டேன்! ராகுல் காந்தி மெல்ல முடியாமல், விழுங்க முடியாமல் தவிப்பது ஏன் தெரியுமா?

மேற்கு வங்கத்தில் கால் வைக்க மாட்டேன்! ராகுல் காந்தி மெல்ல முடியாமல், விழுங்க முடியாமல் தவிப்பது ஏன் தெரியுமா?
X

MuruganandhamBy : Muruganandham

  |  22 April 2021 6:30 AM IST

காங்கிரஸ் தலைவர் மேற்கு வங்கத்தில் கோவிட் பெருந்தொற்று காரணமாக பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதே தலைவர் சென்ற மாதம் கடுமையான கோவிட் பாதிப்பில் இருந்த கேரளாவில் பிரச்சாரம் செய்தார். அது ஏன் என அரசியல் விமர்சகர் சக்கரவர்த்தி கேள்வியெழுப்பி உள்ளார்.

இப்போது அவரை புகழ்ந்து பேசும் ஊடகங்கள் அப்போது என்ன எழுதின? அவர் ஏன் மேற்கு வங்கத் தேர்தலில் முதல் நான்கு கட்டங்களில் பரப்புரை செய்ய மாட்டார் என்ற காரணங்களை "டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள அதன் கூட்டணியை ஆதிரித்தால் கேரளாவில் அதன் வாக்கு விகிதம் பாதிக்கும். இரட்டை நிலைப்பாடு என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும்.

மேற்கு வங்கத்தில் அதற்கு வாக்கு வங்கி இல்லை. கேரளா, அசாம் மட்டுமே அதன் இலக்கு. திரிணாமூல் கட்சியை அது தன் நீட்சியாகத் தான் பார்க்கிறது. பாஜக வாக்கு எதிரான ஓட்டு அங்கு பிரிவதை அவர் விரும்பவில்லை.

எந்த ஒரு சின்ன வாய்ப்பையும் அரசியலில் விட மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் காட்சியின் சமீபத்திய செயல்பாட்டை பார்க்கும் போது, மாநில காட்சிகளைவிட பின்தங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News