Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்சிஜன் சப்ளை அதிகரிப்பு: மத்திய அரசுக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என கூறிய டெல்லி முதல்வர்!

ஆக்சிஜன் சப்ளை அதிகரிப்பு:  மத்திய அரசுக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என கூறிய டெல்லி முதல்வர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 April 2021 1:08 PM GMT

டெல்லியின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரித்த மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நன்றி தெரிவித்தார். தேசிய தலைநகருக்கான ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று முன்பு கோரிக்கை விடுத்திருந்த முதல்வர் கெஜ்ரிவால், தற்போது இதற்காக, தாங்கள் மத்திய அரசுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று ட்வீட் செய்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் ICU படுக்கைகளும் வேகமாக நிரம்பிவிட்டன. டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜன் சப்ளை நிலை வெறும் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே தேசிய தலைநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இரவு 10 மணிக்கு கிடைத்ததாக நகர அரசாங்கத்தின் டெல்லி கொரோனா செயலியின் தகவல்கள் நேற்று தெரிவித்தன.

'டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி நீடிக்கிறது' என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார். சில மருத்துவமனைகளில் சில மணிநேரங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளன எனக் கூறிய அவர் மற்றொரு ட்வீட்டில், "டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு மத்திய அரசை மடிந்த கைகளால் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.


டெல்லி சுகாதார அமைச்சர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இரவு 10:20 மணிக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு ஒரு அவசர செய்தியை அனுப்பினார். "GDP மருத்துவமனையில் ஆக்சிஜன் 4 மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது" என்று கூறினார்.

"ஆக்சிஜன் ஆதரவுடன் 500 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். பெரிய நெருக்கடியைத் தவிர்க்க ஆக்சிஜன் விநியோகத்தை மீட்டெடுக்க பியூஷ் கோயல் உதவி அவசியம்" என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News