Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாளுவதில் தீவிரமாக களமிறங்கிய இந்திய விமானப்படை!

ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாளுவதில் தீவிரமாக களமிறங்கிய இந்திய விமானப்படை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 April 2021 5:30 PM IST

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையுடன் தற்போது இந்தியா கடுமையாக போராடி வருகிறது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் முக்கிய தேவையாக உள்ள மருத்துவ ஆக்சிஜனின் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக நேற்று, மத்திய அரசின் சார்பில் IAF காலியான ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் கொள்கலன்களை எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் பல்வேறு நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்ட கொரோனா மருத்துவமனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் பொருட்கள் மற்றும் உபகரணங்களையும் IAF கொண்டு வந்தது.


நேற்று சிங்கப்பூரிலிருந்து மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பிக்கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் 4 கிரையோஜெனிக் டேங்கர்கள் இந்தியாவுக்கு வந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கொள்கலன்கள் சிங்கப்பூரிலிருந்து IAF இன் C-17 விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக்சிஜன் டேங்கர்களுடன் கூடிய விமானம் மேற்கு வங்காளத்தில் உள்ள பனகர் விமான நிலையத்தில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் தரையிறங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


"சிங்கப்பூரிலிருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள பனகர் விமான நிலையத்தில் 4 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் இந்தியா வந்துள்ளன. சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து IAF C-17 விமானத்தில் கொள்கலன்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டன" என்று இந்திய விமானப்படை நேற்று ட்வீட் செய்தது இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


"ஆக்சிஜன் மற்றும் பிற முக்கியமான பொருட்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க இந்திய விமானப்படை நடவடிக்கை எடுக்கிறது. சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தை அடைந்துள்ளது. இந்த கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் நாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தை மிக விரைவாக அதிகரிக்க உதவும்" என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகம் முன்பு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து அதிக அளவு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் டேங்கர்களை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது தற்பொழுது கவனிக்கத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமையை ஆய்வு செய்த பின்னர்எடுக்கப்பட்டுள்ளது, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதில் பாராட்டத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News