Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த அலை கொரோனாவையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

அடுத்த அலை கொரோனாவையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 April 2021 5:52 PM IST

இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில்தான் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் உச்சத்தை அடைந்தது உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் சீராக வழங்கப்படுகிறதா? என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தார். மேலும் இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனாவின் நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கீழ்க்கண்டவாறு பதிலை அளித்துள்ளார்.


அவர் கூறுகையில், "இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க அவசர தேவை உள்ளது என்றும், கொரோனாவின் 3வது மற்றும் 4வது அலை நாட்டைத் தாக்கக்கூடும் என்றும் எச்சரித்தார். மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவது கொடிய வைரஸை திறமையாக எதிர்த்துப் போராட உதவும் என்று அவர் மேலும் கூறினார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக ரெம்டெசிவிர் தேவை அதிகரித்து வருவதால், ஜெனெடெக் லைஃப் சயின்சஸ் இன்று முதல் வர்தாவில் மருந்து உற்பத்தியைத் தொடங்கும் என்று கட்கரி கூறினார்.


அந்த நிறுவனம், ஒரு நாளைக்கு சுமார் 30,000 ஊசிகளை உற்பத்தி செய்யும் என்றார். கொரோனா சிகிச்சையில் டாக்டர்களால் ரெம்டெசிவிர் ஊசி பயன்படுத்தப் படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்களில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்த மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. நாக்பூர், விதர்பாவின் பிற மாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தேவைக்கேற்ப ஊசி விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News