இந்தியாவிற்கு முழுமையாக கைகொடுக்கும் ராணுவப்படை: பின்னணி இதுதான்.!

By : Bharathi Latha
இந்தியாவில் தினசரி பாதிப்புகள் மூன்று லட்சத்திற்கு அதிகமாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ பயன்பாடு மற்றும் ஆக்சிஜன் சப்ளை போன்றவை சரியான அளவை கொண்டு உள்ளனவா என்று மத்திய அரசாங்கம் கவனித்து வருகிறது.
இன்று பிரதமர் மோடி அவர்கள் ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனேவுடன் ஒரு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். அதாவது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை எதிர் கொள்ள ராணுவத்தின் நிலை பற்றியும் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்தார்.
ராணுவத்தில் சேர்ந்த பல்வேறு மருத்துவ ஊழியர்கள் பலதரப்பட்ட பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தற்போது உதவி உதவியாக இருப்பதாக இராணுவ தலைமை ஜெனரல் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் குடி மக்களுக்காக ராணுவமே தற்போது தற்காலிகமாக மருத்துவமனைகளை அமைத்து வருகிறது. மேலும் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது என்பதையும் தெரிவித்தார். இராணுவ மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்காக அணுகலாம் என்றும் அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்க சிறப்புத் திறன்கள் தேவைப்படும் வாகனங்களுக்கு மனிதவளத்துடன் இயக்க இராணுவம் உதவுகிறது என்றும் ஜெனரல் எம்.எம்.நாரவனே பிரதமருக்கு தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் அதன் வளங்களை முழுமையாக பயன்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் தினசரி சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
மேலும் mஇதன் பின்னணி என்னவென்றால், இந்த போராட்டத்தில் ராணுவ படை, விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் சிறந்த முறையில் தன்னுடைய நாட்டிற்கு பக்கபலமாக இருந்து இந்த போராட்டத்தை நிச்சயம் வெல்லும். எனவே இது ஒரு பாராட்டத்தக்க வேண்டிய ஒரு விஷயம்.
