பாராளுமன்ற கட்டிடம் குறித்து பரவும் சர்ச்சை! பூரா பிரச்சனையும் ஆரம்பித்து வைப்பதே தமிழக மீடியாக்கள் தானாம்!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பொழுதுபோக்கு கட்டிடம் போல நினைத்து போராளிகள் விவாதித்து வருகிறார்கள். அதை கட்டி முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகலாம்.
புதிய நாடாளுமன்ற வளாகம் 51 மத்திய அமைச்சக அலுவலகங்கள், 41000 அரசு அதிகாரிகள், பிரதமர், குடியரசு துணைத் தலைவர், அருங்காட்சியகம், பாதுகாப்பு பணியாளர்கள் இருப்பிடம் என்று பன்னோக்கு திட்டத்தில் ஒரே வளாகத்தில் Central Vista அமைக்கப்படுகிறது.
தற்போது 22 அமைச்சக அலுவலகங்கள் மட்டுமே இவ்வளாகத்தில் உள்ளன. வெளியில் இருந்து அமைச்சர்கள் வருவது, தேவையற்ற பாதுகாப்பு சோதனை, இதற்காக புது தில்லியில் பொது மக்கள் போக்குவரத்து நிறுத்தம், எரிபொருள் செலவு என பல நடைமுறைகள் மாறி பயனளிக்கும். இதன் பலன்கள் அதிகம் என்று முன்பே தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர்.
இதனைப்பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடாது. ஆனால் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுவதற்கு எதிராக ஒரு நடிகர் குரல் கொடுத்துவிட்டாலும், அவர்கள் வீட்டு வாசலில் படுத்துக்கிடக்கும்.
2026இல் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இப்புதிய கட்டிடம் உதவியாக இருக்கும். கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட மொத்த தொகையும் வீணாகப்போவதில்லை. தற்போது ஏற்பட்டு வரும் சிக்கல்களை தடுத்து, எதிர்காலத்தில் செலவினங்களை குறைக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் இல்லாத நிலையில் வேலைகளை செய்து முடிக்க ஏதுவாக இருப்பதால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனத்தெரிகிறது.