Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை வெற்றி கொள்ள, இந்தியாவிற்கு உதவுவதாக அறிவித்துள்ள வால்மார்ட் நிறுவனம்!

கொரோனாவை வெற்றி கொள்ள, இந்தியாவிற்கு உதவுவதாக அறிவித்துள்ள வால்மார்ட் நிறுவனம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 May 2021 1:31 AM GMT

இந்தியாவுடனான கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல உலக நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது என்றே சொல்லலாம். எனவே இந்த பாதிப்புகளிலிருந்து மீள பல நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி உதவி செய்கிறது.


அந்த வகையில் தற்போது உயிர்காக்கும் ஆக்சிஜன் வாயுவை சேமிப்பதற்கும், மேலும் அவற்றை தேவைப்படும் மருத்துவமனைகள் உள்ள இடங்களுக்கு அனுப்புவதற்கும், பிரபல அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனமான விளங்கும் வால்மார்ட் உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் 20 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்களையும், 20 கிரையோஜெனிக் கொள்கலன்களையும் இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக தற்பொழுது அறிவித்துள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு சாரா நிறுவனங்களுக்கு சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை வால்மார்ட் நிறுவனம் நன்கொடையாக அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


"வால்மார்ட் ஆக்சிஜன் சேமிப்பு, கிரையோஜெனிக் கொள்கலன்கள், அத்துடன் 3,000க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சையை வழங்குவதற்காக நன்கொடை அளிக்கும்" என்று வால்மார்ட் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வால்மார்ட் இன்க் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் CEO ஆன டக் மெக்மில்லன் இதுபற்றி கூறுகையில், "வால்மார்ட் ஒரு உலகளாவிய குடும்பம். இந்தியா முழுவதும் தற்போது நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை நாங்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் மூலமாக உணர்கிறோம். எனவே எங்களால் முடிந்தவரை ஒன்றிணைந்து ஆதரவளிக்க விரும்புகிறோம்" என்று கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News