Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு ஆதரவு திரட்டிய ஐரோப்பா ஒன்றியம்: பாராட்டை தெரிவித்த பிரதமர்!

இந்தியாவிற்கு ஆதரவு திரட்டிய ஐரோப்பா ஒன்றியம்: பாராட்டை தெரிவித்த பிரதமர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 May 2021 11:35 AM GMT

இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனாவின் அலை வீசிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு ஆதரவாக பல நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். குறிப்பாக, இன்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் கருத்துப் பரிமாறிக் கொண்டார்.


தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு விரைவான ஆதரவைத் திரட்டியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனைத்திற்கும் இந்திய பிரதமர் மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து இந்திய தரப்பில் இருந்து விவாதிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நடந்த உச்சி மாநாட்டிலிருந்து இந்தியா ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


வருகிற மே 8 ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறவிருக்கும் இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம் இரு தரப்புக்கும் இடையே முக்கியமான வாய்ப்பாகும் என்று இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம் ஐரோப்பிய ஒன்றிய முதல் சந்திப்பாக இருக்கும். மேலும் இது இந்தியா ஐரோப்பிய ஒன்றிய கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான இரு தரப்பினரின் பகிரப்பட்ட லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது என்று இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News