Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வாங்க மாநிலத்தில் மாபெரும் கலவரம் - உண்மையை மூடி மறைக்கும் மம்தா பானர்ஜி!

மேற்கு வாங்க மாநிலத்தில் மாபெரும் கலவரம் - உண்மையை மூடி மறைக்கும் மம்தா பானர்ஜி!

MuruganandhamBy : Muruganandham

  |  5 May 2021 1:00 AM GMT

மே 2 அன்று மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிலவி வருகிறது. இப்போது பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் குறிவைக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும், படுகொலை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, வாக்கெடுப்புக்கு பிறகு குறைந்தது 14 வன்முறைக் கொலைகள் மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாஜக தனது கட்சியை சேர்ந்த ஒன்பது தொண்டர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரசும் (டி.எம்.சி) தனது கட்சியை சேர்ந்த மூன்று தொண்டர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 294 இடங்களில் 213 என்ற மகத்தான வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் பாஜக 77 இடங்களை வென்றது.

வன்முறை குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. குறிப்பாக இந்து ஆர்வலர்கள் மற்றும் வங்காளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் ஆகியோரின் கணக்குகளில் இருந்து அவை பகிரப்பட்டுள்ளன.

இத்தனை நடந்தும் மம்தா பானர்ஜி வன்முறை தொடர்பாக உணர்ச்சியற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். "வங்காளத்திற்கு வெளியே நடந்த கலவரங்களின் பழைய படங்களைப் பயன்படுத்தி பாஜக பொய்களை பரப்புகிறது" என்று சம்பவத்தை திசை திருப்பி விட்டுள்ளார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News