Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தும் முடிவு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உற்பத்தியை  அதிகப்படுத்தும் முடிவு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 May 2021 5:34 PM IST

இந்தியாவில் அதிகமாக பரவி வரும் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்வதுதான். எனவே அவற்றிற்கான மூலப் பொருட்களையும் அதிக அளவில் வாங்குவதன் மூலம் தான், அவற்றில் மிகச் சரியான நேரத்தில் சரியான அளவில் உற்பத்தி செய்து இயலும்.

எனவே இவற்றைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி அவர்கள் லண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறனை அதிகரிப்பது குறித்து விவாதித்துள்ளனர்.


இதைப்பற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "நாங்கள் விவாதித்த விஷயங்களில் முதன்மையானது, கொரோனா நிலைமையைக் கையாள்வதில் அமெரிக்காவிலிருந்து எங்களுக்கு கிடைத்த வலுவான ஆதரவு. நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம்" என்று அமைச்சர் கூறினார்.

எனவே தேவையான அளவு மூலப் பொருட்களையும் இந்தியாவிற்கு வழங்குவது குறித்த அமெரிக்கா விரைவில் முடிவெடுக்கும் என்று அவர் கூறினார். இதன் மூலம் நம் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் கூறுகையில், "கொரோனாவின் ஆரம்ப நாட்களில் இந்தியா எங்களுக்கு மிகவும் உதவியாக பல செயல்களை செய்து உள்ளது. எனவே நாங்கள் அவற்றை மறக்க மாட்டோம். நாங்கள் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

எங்களால் முடிந்த உதவியைச் செய்ய உறுதியாக இருக்கிறோம். பின்னர் எங்கள் உண்மையான உலகளாவிய சவாலை சமாளிக்க உதவும் வகையில் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News