Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் புதிதாக உருவெடுக்கும் கொரோனா: மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் எச்சரிக்கை!

மீண்டும் புதிதாக உருவெடுக்கும் கொரோனா: மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் எச்சரிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 May 2021 5:35 PM IST

இந்தியாவில் தற்பொழுது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸான N440K என்ற வகை மிகவும் ஆபத்தானது மற்றும் இத்தகைய வைரஸ் காரணமாக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலமாக இவற்றின் பரவலைத் தடுக்க முடியும்.

எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட மாநிலங்கள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த வகை கொரோனா தொற்றை சேர்ந்தவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவை சீக்கிரத்தில் அழிந்து போய் விடும் என்று செல்லுலார் மூலக்கூறு உயிரியல் மையத்தில்(CAMP) பணிபுரியும் ஆலோசகர் டாக்டர்.மிஸ்ரா கூறியுள்ளார்.


ராகேஷ் மிஸ்ரா அவர் மேலும் கூறுகையில், "உலகளவில் பல நாடுகளை கவலையடையச் செய்யும் தொற்று வகைகள் இதுவரை இந்தியாவில் மிகக் குறைவான பாதிப்புகளை மட்டும்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் நோயெதிர்ப்பு சக்தியை மீறி தாக்கும் இத்தகைய வைரஸ்களை விரைவாக தடுக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.

மேலும் வைரஸ்களின் புதிய வகைகளின் தோற்றத்தை துல்லியமாக அடையாளம் காண நாடு முழுவதும் அதிகமான கொரோனா வைரஸ் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, ஒரு சில மாநிலங்களில் மட்டும் தான் இத்தகைய புதிய வகை கொரோனா அதிகமாக பரவுகிறது. ஆகவே புதிய வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தனியாக தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவர்களையும் மற்ற நோயாளிகளின் போல் நடத்தாமல் அவர்களுக்கு தனியாக மருத்துவ உதவிகளை வழங்குவதன் மூலம் இத்தகைய வைரஸ்களையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மோசமான மருத்துவ அறிகுறிகளும் இருக்கும் பேரழிவு விளைவுகளைத் தடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று டாக்டர் மிஸ்ரா கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News