ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு சுங்க கட்டணம் இல்லை-மத்திய அரசு!
By : Shiva
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளதால் ஆக்சிஜன் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளில் காத்திருப்பு நேரம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது வேலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும் மாநிலங்களிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு சுங்கச்சாவடியில் விரைவாக முன்னேறி செல்வதற்கும் உங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாஸ்டேக் திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து சுங்கச்சாவடியில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்கள் இன்னும் வேகமாக முன்னேறி செல்வதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அரசு மற்றும் தனியாரின் முயற்சிகளுக்கு உதவுமாறு தனது அனைத்து அலுவலர்கள் மற்றும் பங்குதரர்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) கேட்டுக் கொண்டுள்ளது. ஆக்சிஜன் விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக அனைத்து வழிவகைகளையும் நெடுஞ்சாலைகள் ஆணையம் செய்து தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஆக்சிஜன் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் எந்தவித சிரமமும் இன்றி அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.