Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை வெற்றிக்கொள்ள புதிய திட்டத்தை கையில் எடுக்கும் பாதுகாப்பு அமைச்சகம்!

கொரோனாவை வெற்றிக்கொள்ள புதிய திட்டத்தை கையில் எடுக்கும் பாதுகாப்பு அமைச்சகம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 May 2021 5:36 PM IST

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆயுதப்படைகளின் ஓய்வுபெற்ற மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் தற்பொழுது ஒப்புதல் அளித்தது. குறிப்பாக முன்னாள் இராணுவ மருத்துவப் படைகள், குறுகிய சேவை ஆணையம் ஆகியவற்றின் கீழ் பணியாற்றிய மருத்துவ அதிகாரிகளைச் சேர்ப்பதற்காக பொது ஆயுதப்படை மருத்துவ சேவைகள் இயக்குநரகத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


எனவே பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, டூர் ஆஃப் டூட்டி திட்டத்தின் கீழ் 2017 மற்றும் 2021 க்கு இடையில் விடுவிக்கப்பட்ட 400 முன்னாள் மருத்துவ அதிகாரிகள் அதிகபட்சமாக 11 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 8 வெளியிடப்பட்ட உத்தரவு, ஆணையின்படி தற்போது உள்ள நோய்த்தொற்றை சமாளிப்பதற்கு கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


முன்னதாக, பல்வேறு பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் மருத்துவமனைகளில் நிபுணர்கள், சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகள் மற்றும் துணை மருத்துவர்கள் உள்ளிட்ட கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தியது. அதே நேரத்தில் குறுகிய சேவை ஆணையிடப்பட்ட மருத்துவர்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேலும் 238 மருத்துவர்கள் தங்கள் சேவையைத் தொடர்கின்றனர். அண்மையில் ஓய்வு பெற்ற மருத்துவ வல்லுநர்களும் சுகாதார நிபுணர்களின் பணியாளர்களை மேலும் மேம்படுத்துவதற்காக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இ-சஞ்சீவனி OPT குறித்த ஆன்லைன் இலவச ஆலோசனையை சேவையை பெற https://esanjeevaniopd.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News