வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிவாரண பொருட்கள் குறித்து மத்திய அரசு தகவல்?
By : Shiva
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகள் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகிறது. இதனை மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிவாரணப் பொருட்களை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணியை மத்திய அரசின் அனைத்து துறைகளும் மேற்கொண்டு வருகிறது. 2021 ஏப்ரல் 27 முதல் மே 9 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து மொத்தம் 8900 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 5043 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 18 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 5698 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 3.4 லட்சம் ரெமிடெசிவிர் மருந்துகள் ஆகியவை பெறப்பட்டுள்ளது. இதனை தேவை அதிகம் இருக்கும் மாநிலத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுப்பி வருகிற
1000 செயற்கை சுவாசக் கருவிகள், 2267 பிராணவாயு செறிவூட்டிகள்,10000 ஆக்சிமீட்டர், 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை இந்திய அமெரிக்க கூட்டு மன்றம், இங்கிலாந்து மற்றும் தென் கொரிய நாடுகளில் இருந்து பெறப்பட்டதுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் நிவாரண பொருட்கள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உடனடியாக மத்திய அரசு துறைகளின் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றையும் மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது என்று மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.