Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை எதிர்கொள்வதில் இவர்களின் பங்கு முக்கியமானவை: பிரதமர் பாராட்டு!

கொரோனாவை எதிர்கொள்வதில் இவர்களின் பங்கு முக்கியமானவை: பிரதமர் பாராட்டு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 May 2021 6:20 PM IST

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 11ஆம் தேதி இது தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய தொழில்நுட்ப தினத்தை நினைவு கூறும் விதமாக விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஒட்டுமொத்தமாக நேற்று அவர் பாராட்டியுள்ளார். எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும், நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் எப்போதுமே கடினமான சந்தர்ப்பங்களில் முன்னே தனது தீர்வுகளை வழங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு விஞ்ஞானிகள் கடினமாக உழைத்துள்ளனர் என்பதையும் பிரதர் நினைவுகூர்ந்தார். தேசிய தொழில்நுட்ப தினம் 1998 ஆண்டு தான் ராஜஸ்தானின் போக்ரானில் நடத்தப்பட்ட நிலத்தடி அணுசக்தி சோதனைகளின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடுகிறது.


தேசிய தொழில்நுட்ப தினத்தன்று, எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியான தன்மைக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார். எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் எப்போதுமே முன்னணியில் இருந்து, சவாலை முறியடிக்க பணியாற்றியுள்ளனர் என்பதை அனைவரும் மறக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News