கொரோனாவின் கோரதாண்டவம்: அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தடுப்பூசிகளின் தேவையும் மற்றும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருந்து வருகிறது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைவதை அரசின் நோக்கமாக தற்போது உள்ளது. அவற்றை நிறைவு செய்யும் விதமாக மத்திய அரசு தற்போது சிறப்பான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் பற்றாக்குறையுடன் மாநிலங்கள் போராடி வரும் நிலையில், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சுமார் 5 மாதங்களில் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டில் கிடைக்கும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் முழு மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானது. மேலும் தற்போது, ரஷ்ய கொரோனா ஸ்புட்னிக் V தடுப்பூசி அடுத்த வாரத்திற்குள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய மக்களுக்காக இந்திய நாட்டிலேயே இன்னும் 5 மாதங்களில் 216 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் நாட்டில் தயாரிக்கப்படும். இதன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் v.k.பால் கூறினார். அடுத்த ஆண்டில் 2022 முதல் காலாண்டில், இந்த எண்ணிக்கை 300 கோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரையில், கோவிஷீல்ட்டின் 75 கோடி டோஸ் உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் 55 கோடி டோஸ் கோவாக்சின் கிடைக்கும் என்று அவர் மதிப்பிட்டார். மேலும், பயோலாஜிக்கல் நிறுவனத்திடம் இருந்த சுமார் 30 கோடி டோஸ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(SII) 20 கோடி டோஸ் நோவாவாக்ஸ் மற்றும் பாரத் பயோடெக் அதன் நாசி தடுப்பூசியின் 10 கோடி டோஸ் உற்பத்தி செய்யும் என்றும் தற்பொழுது எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜெனோவா 6 கோடி டோஸ் மற்றும் ஸ்புட்னிக் V 15.6 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.