Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் தடுப்பூசிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை - அமெரிக்க மருத்துவர் தகவல்!

இந்தியாவில் தடுப்பூசிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை - அமெரிக்க மருத்துவர் தகவல்!

ShivaBy : Shiva

  |  15 May 2021 12:45 AM GMT

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கால இடைவெளி 12-16 வரங்களாக நீட்டிக்கப்பட்டது நியாயமானது என்று அமெரிக்க மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாசி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசியில் முதல் டோஸிர்க்கும் இரண்டாவது டோஸ்க்கும் இருக்கும் கால அளவை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது. ஆனால் மற்றொரு தடுப்பூசி யான கோவாக்சின் தடுப்பூசிக்கான கால அவகாசத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் எந்த நேரத்தில் மத்திய அரசை குறை கூறலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதை மூடி மறைப்பதற்காகவே இவ்வாறு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தடுப்பூசியை காலதாமதம் செய்து செலுத்துவதால் அதன் வீரியம் குறையும் என்று பொய்யான குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாசி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா இதுபோன்ற கடினமான சூழலில் தடுப்பூசியை எவ்வளவு விரைவாக செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும்.

மேலும் தடுப்பூசியின் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தடுப்பூசி இல்லாததை மூடிமறைக்க தான் என நான் குறிப்பிட மாட்டேன் என்றும், இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தினால் தடுப்பூசியின் செயல்திறனில் எந்த ஒரு எதிர்மறை விளைவையும் உண்டாக்காது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு பொதுமக்களிடம் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்த எதிர்க்கட்சியினர் தற்போது தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது என்று பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டு இக்கட்டான நிலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News