Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை வெல்வதில் முன்மாதிரியாக திகழும் மாநிலம்: நிதி ஆயோக் அமைப்பு பாராட்டு!

கொரோனாவை வெல்வதில் முன்மாதிரியாக திகழும் மாநிலம்: நிதி ஆயோக் அமைப்பு பாராட்டு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 May 2021 7:37 PM IST

இந்தியாவில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநிலங்கள் கொரோனாவை எதிர்கொள்ளும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் மாநில அரசு அறிமுகப்படுத்திய 'சோதனை மற்றும் தடமறிதல்' மாதிரியை நிதி ஆயோக் பாராட்டியுள்ளது.

கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கவும் கண்காணிக்கவும். மேலும், நோயாளிகள் அவர்களின் வீடுகளில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு ஒரு மகத்தான இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.


அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு உத்தரபிரதேச மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்பாடு செய்ததற்காக நிதி ஆயோக் மாநில அரசைப் பாராட்டியுள்ளது.

ஆக்ஸிஜன் போக்குவரத்து மற்றும் கண்காணிப்புக்கு ஒரு பாராட்டத்தக்க ஒரு விஷயம். உத்தரபிரதேச அரசு ஆக்ஸிஜன் மையங்களை நிறுவி ஒரு டாஷ்போர்டை உருவாக்கியுள்ளது. ஆக்ஸிட்ராக்கர் எனும் இந்த அமைப்பு மூலம் டேங்கர்களை எந்த நேரத்தில் கண்காணிக்க முடியும் என்று அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.


இது ஆக்ஸிஜனை விரைவாகவும் ஸ்மார்ட் ரீதியாகவும் ஒதுக்க அனுமதிக்கிறது. இதற்கு முன் தினசரி 250 மெட்ரிக் டன்னுக்கு பதிலாக 1000 மெட்ரி டன்னாக மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என நிதி ஆயோக் மேலும் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் 90,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சோதனை போன்றவை பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News