பிரபல பத்திரிகையாளர் சுனில் ஜெயின் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
By : Shiva
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "நீங்கள் எங்களை சீக்கிரம் விட்டுவிட்டு சென்று விட்டீர்கள். பல்வேறு விஷயங்களில் உங்கள் வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த கருத்துக்களை கேட்பதையும் உங்கள் கட்டுரைகளைப் படிப்பதையும் உங்கள் இழப்பை உணர்வேன். எழுச்சியூட்டும் பணியை உங்கள் நினைவாக விட்டுச் சென்றுள்ளீர்கள். உங்களின் மறைவால் பத்திரிக்கை துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. உங்களது மறைவுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
மே 2013 முதல் பினான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் சுனில் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வலுவான கருத்துக்களைக் கொண்ட மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியரான திரு.ஜெயின் பொருளாதார கொள்கையில் உள்ள சவால்களை புரிந்து கொள்வதில் பிற பத்திரிகையாளர்களின் உதவியை நாடத் தயங்காத சிறந்த மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பத்திரிகையாளர் சுனில் ஜெயின் கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பத்திரிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.