Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா விதித்த பயண தடை முடிவு: வந்த மருத்துவ உபகரணங்கள்!

ஆஸ்திரேலியா விதித்த பயண தடை முடிவு: வந்த மருத்துவ உபகரணங்கள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 May 2021 5:38 PM IST

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவத் தொடங்கிய போது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் அவர்களுக்கு சுமார் 5 ஆண்டு வரை சிறை தண்டனை, 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் பணமும் வரையில் அபராதமாக விதிக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய அரசு எச்சரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பயண தடை நன்றாக வேலை செய்ததாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கருத்தையும் அதிக சேர்த்துள்ளார்.


இந்த தடை உத்தரவு தற்சமயம் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது. தற்போது இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர்.


மீதமுள்ள உள்ள ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தகவல் தெரிவித்தார். ஆகவே இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது. இந்த விமானம் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News