ரேஷன் கடைகளை அனைத்து நாட்களிலும் நீண்ட நேரம் திறக்க மத்திய அரசு பரிந்துரை!
By : Janani
மத்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக மற்றும் மானிய வழங்கப்படும் தானியங்கள் சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பாகச் சென்றடைய ரேஷன் கடைகளை நீண்ட நேரம் மற்றும் அனைத்து நாட்களும் திறந்து வைக்கக் கேட்டுக்கொண்டது.
தற்போது கொரோனா தொற்று காலத்தால் மாநிலங்களில் ரேஷன் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், பயனாளிகளுக்குச் சரியான நேரத்தில் உரியத் தானியங்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புண்டு என்று மத்திய உணவு துறை அமைச்சகம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 80 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தனி நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை 1-3 ரூபாய்க்கு மத்திய அரசாங்கம் வழங்கி வருகின்றது.
மேலும் கொரோனா தொற்று காலங்களில் குறைந்தளவில் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை PMGKAY திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதத்தில் வழங்குகிறது.
இந்த ஆலோசனையில், PMGKAY மற்றும் NFSC திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வழங்குவதற்கு ரேஷன் கடைகளை நாள் முழுவதும் தொடர்ந்திருக்கவும் மற்றும் கொரோனா தொற்றுக்கு எதிரான வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மாநிலங்களுக்கு மக்கள் சிரமம் அடையாமல் உணவு தானியங்களை FPS கீழ் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் இதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளம்பரம் கொடுக்கவும் மாநிலங்களுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டது.