Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை முற்றிலும் தடுக்க சுய தனிமைப்படுத்துதல் மிகவும் முக்கியம்: உணர்த்திய பழங்குடியின மக்கள்!

கொரோனாவை முற்றிலும் தடுக்க சுய தனிமைப்படுத்துதல் மிகவும் முக்கியம்: உணர்த்திய பழங்குடியின மக்கள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 May 2021 5:59 PM IST

இந்தியாவில் தற்சமயம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக குறைந்திருந்தாலும், ஆனால் இந்த நோய் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 4 ஆயிரமாக தான் உள்ளது. ஆனால் சுய தனிமைப்படுத்தல் மூலமாக கொரோனாவை விரட்ட முடியும் என்று ஒரு கிராமமே நிரூபித்துக் காட்டி உள்ளது. கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்ட கிராமங்களின் பழங்குடியின மக்கள் சுயமாக கடைப்பிடித்த தனிமை கட்டுப்பாடுகள் கொரோனாவை அந்த கிராமத்து இடம் நெருங்கவிடாமல் செய்துள்ளன.


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சார்ந்த வனப்பகுதி கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். 'சுய தனிமை' என்ற மிக புத்திசாலித்தனமான நடவடிக்கை இந்த பழங்குடி இன மக்கள் பின்பற்றி உள்ளார்கள். இதன் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து இவர்களை முழுமையாக பாதுகாத்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னாள், இங்கு வசிக்கும் 750 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் நினைவுகூரத்தக்கது.


இதுபற்றி மக்கள் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் நலனுக்காக, நாங்கள் தனிமையில் இருக்கிறோம். இதனால், கொரோனா எங்களை நெருங்கவில்லை" என கூறி உள்ளனர். மருந்துகள், அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே வெளியே வந்துள்ளனர். பரிசோதனை உள்ளிட்ட பணிகளுக்காக போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினரையும் தங்கள் பஞ்சாயத்தில் அவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மூணாறில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள எடமலைக்குடி பஞ்சாயத்து தென் மாநிலங்களில் கொரோனா இல்லாத ஒரே பஞ்சாயத்து என பெருமை பெற்று உள்ளது என்பதும் பாராட்டத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News