Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா, சிங்கப்பூர் நாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்படுமா? முன்னரே தடுத்து நிறுத்திய மத்திய அமைச்சர்!

இந்தியா, சிங்கப்பூர் நாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்படுமா? முன்னரே தடுத்து நிறுத்திய மத்திய அமைச்சர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 May 2021 4:53 PM IST

உலகில் பல நாடுகளில் தற்போது தோன்றியுள்ள புதுவகை கொரோனா தொற்று பல அலைகளைக் கடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சிங்கப்பூரில் தோன்றியுள்ள புதுவகை கொரோனா மூன்றாவது அலை குறித்து, பல நாடுகள் தற்பொழுது பயத்தில்தான் உள்ளனர்.

இந்த வகையில் சிங்கப்பூரில் இருக்கும் புதுவகை கொரோனா மாறுபாடு குறித்து டெல்லி முதல்வர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்தை சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் பெரும் வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இது இந்தியா சார்பாக பேசப்பட்ட ஒரு வாதம் அல்ல என்பதையும் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.


அதாவது, சிங்கப்பூர் அரசு இந்திய தூதரை அழைத்து கடும் ஆட்சேபனை தெரிவித்ததால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய அரசின் சார்பாக பேசவில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். தொற்றுநோயை எதிர்ப்பதில் சிங்கப்பூரும், இந்தியாவும் உறுதியான கூட்டாளிகளாக இருந்தன என்றும், தளவாட மையமாகவும் ஆக்ஸிஜன் சப்ளையராகவும் சிங்கப்பூரின் பங்கைப் பாராட்டியதாகவும் ஜெய்சங்கர் மேலும் கூறினார்.



டெல்லி முதல்வர் ட்விட் பதிவுக்கும், இந்தியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வெளிக்கொணரும் விதமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட் செய்துள்ளார். அதாவது "கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும், இந்தியாவும் உறுதியான நட்பு நாடுகளாக இருந்தன.

ஒரு தளவாட மையமாகவும் ஆக்ஸிஜன் சப்ளையராகவும் சிங்கப்பூரின் பங்கைப் பாராட்டுகிறேன். நமக்கிடையே உள்ள மிகவும் நெருக்கமான உறவைப் பற்றி பேசவேண்டுமானால், எங்களுக்கு உதவ இராணுவ விமானங்களை பயன்படுத்துவதற்கான அவர்களின் அந்த செயல்பாடு போதும்" என்று ஜெய்சங்கர் ஒரு ட்வீட்டில் தெரிவித்து இருக்கிறார்.

இருப்பினும், நன்கு தெரிந்து கொள்ள வேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள் நீண்டகால கூட்டாண்மைகளை பெரிதும் சேதப்படுத்தும். எனவே, டெல்லி முதல்வர் இந்தியாவுக்காக பேசவில்லை என்று நான் தெளிவுபடுத்துகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News