கொரோனாவிற்கு அடுத்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றை எப்படி உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும்? ரொம்ப சிம்பிள்!

By : Muruganandham
கருப்பு பூஞ்சை தொற்று என்பது புதிய நோய் ஒன்றும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே இத்தகைய தொற்றுகள் உள்ளன. அவற்றின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. தற்போது, கொரோனா காரணமாக, இந்த அரிதான ஆனால் கொடிதான பூஞ்சை தொற்று குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது.
மோதெரபி மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வோரிடமும் இது காணப்பட்டது. ஆனால், கொவிட்-19 மற்றும் அதன் சிகிச்சை முறையின் காரணமாக, அதிக அளவிலான பாதிப்புகள் தற்போது ஏற்பட்டு வருகின்றன.
காற்று, தண்ணீர் மற்றும் உணவில் கூட இவை இயற்கையாக காணப்படுகின்றன. காற்று மூலம் உடலுக்குள் நுழையும் இது, தோலில் ஏற்படும் வெட்டு, தீ புண் அல்லது காயத்தின் மூலமாக கூட உடலுக்குள் நுழையும். இந்தச் தொற்றை விரைவில் கண்டறிவதன் மூலம் பார்வை குறைபாடு அல்லது மூளை குறைபாட்டை தவிர்க்க முடியும்.
ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்துவோர் ஈரப்பதமூட்டியை நன்றாக தூய்மை செய்து தேவைப்பட்டால் அதை மாற்ற வேண்டும். ஈரப்பதமூட்டி குப்பிகளில் நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற சாதாரண சலைன் திரவத்தை பயன்படுத்த வேண்டும் மற்றும் தினசரி மாற்ற வேண்டும். முகக் கவசங்களை தினமும் தூய்மைப்படுத்த வேண்டும்.
கண்கள் மற்றும் மூக்கை சுற்றி வலி மற்றும் சிவந்துப்போதல், காய்ச்சல் (பொதுவாக லேசான), மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், சுவாசக் குறைபாடு, தலைவலி, இருமல், மூச்சு விடுவதற்கு சிரமம், ரத்தவாந்தி, மாறும் மனநிலை மற்றும் பார்வை குறைபாடு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
