கொரோனா தொற்றை குறைக்க புதிய கண்டுபிடிப்புகள் - இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

By : Muruganandham
கொரோனாவுக்கான பொது சுகாதார நடவடிக்கை, தடுப்பூசி பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்தாண்டு இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து வயது வந்தோருக்கும், தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நாடு இருக்கும். கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசியில் கவனம் செலுத்தும்படியும், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு மருந்துகள், மற்றும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு உதவியையும் அளித்து வருகிறது.
நாட்டில் நிலவும் தற்போதைய சவாலான, கொரோனா இரண்டாவது அலையை சமாளிப்பதற்கான தொடக்க முயற்சிகளுக்கு விரைந்து உதவுவதற்காக, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
NIDHI4COVID2.௦ என்ற ஒரு புதிய முயற்சியின் கீழ் விண்ணப்பிக்கக்கூடிய நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தகுதியான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, சிறிய தீர்வு, கொவிட் தொடர்புடைய மருத்துவ பாகங்கள், நோயறிதல் போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள உள்நாட்டுத் தீர்வுகளையும், புதுமையான தயாரிப்புகளையும் ஆதரிப்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் இந்த சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது. இது கொவிட்-19 நெருக்கடிக்கு எதிராக போராட பெருமளவில் உதவும்.
