யோகி அதிரடி.! சட்டவிரோதமாக ரெம்டேவிசிர் விற்பனை செய்தால் தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும்..!
By : Janani
தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ரெம்டேவிசிர் மருந்தை, உத்தரப் பிரதேசத்தில் கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.
உயிர் காக்கும் மருந்துகளைப் பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கான்பூரை பார்வையிடச் சென்ற முதல்வர் யோகி, அடுத்த மாதத்தில் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான வேகத்தை அதிகரிக்கவுள்ளதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும் அரசாங்கம் கருப்பு பூஞ்சை நோயை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 100 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், கடந்த மாதம் கள்ளச் சந்தையில் ரெம்டேவிசிர் மருந்தை விற்றதற்காக NSA கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசியப் பாதுகாப்பு ஒழுங்கை மீறுபவர்கள் மீது 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.