Kathir News
Begin typing your search above and press return to search.

சுற்றுச்சூழலை காக்க மத்திய பிரதேச அரசின் புதிய 'அங்கூர்' திட்டம் : சுவாரசிய தகவல்..!

சுற்றுச்சூழலை காக்க மத்திய பிரதேச அரசின் புதிய அங்கூர் திட்டம் : சுவாரசிய தகவல்..!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 May 2021 7:01 AM IST

நாம் முன்பு வாழ்ந்த காலத்தில், மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டது. தற்போது அந்த காலகட்டத்திற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது என்பதை மத்திய பிரதேச அரசு கருத்தில் கொண்டு புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.


இதனால் மத்திய பிரதேச அரசு சார்பில் மழைக்காலத்தில் மரங்களை நடவு செய்வதற்காக 'அங்கூர்' எனும் பெயரில் புதிய திட்டம் தொடங்குவதாகவும், இதில் ஈடுபடும் மக்களுக்கு விருது வழங்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்முயற்சி எடுக்கும் மக்களுக்கு அவர்கள் பங்கேற்றதற்காக 'பிராணவாயு விருது' வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நாங்கள் ஆக்ஸிஜன் நிலையங்களை அமைத்து வருகிறோம். ஆனால் மரங்கள் இயற்கை ஆக்ஸிஜனை வழங்குகின்றன. எந்த ஆக்ஸிஜன் நிலையங்கள் மரங்களை விட பெரிதாக இல்லை. மழைக்காலத்தில் அங்கூர் திட்டத்தின் கீழ் ஒரு மரக்கன்று தோட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.


இயற்கையின் ஏற்றத்தாழ்வு சரிசெய்யப்பட வேண்டும் என்றும் மழைக்காலத்தில் அதிக மரங்களை நடவு செய்வதாக குடிமக்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பங்கேற்பாளர்கள் மரக்கன்றுகளை நடும் போது ஒரு படத்தை பதிவேற்ற வேண்டும் மற்றும் 30 நாட்கள் மரக்கன்றுகளை கவனித்துக்கொண்ட பிறகு மற்றொரு புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் என்றார். சரிபார்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு பிராண்வாயு விருதை முதல்வர் வழங்குவார் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News