ட்ரோன் மூலம் தடுப்பூசி? தெலங்கானாவில் பலே திட்டம்!
By : Janani
ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க புதிய திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டத்தை தெலங்கானாவில் இருந்து தொடங்க திட்டம். இந்த பைலட் திட்டம் அடுத்த 2 - 3 வாரங்களில் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10,000 டோஸ்களை மையத்தில் இருந்து ஆரம்பச் சுகாதார மையங்களுக்கு அனுப்ப முடிவு.
இந்த சோதனை 24 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விகாரபத்தில் உள்ள மாவட்ட தலைமைச் செயலகத்திலிருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுகாதார மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும் இதில் தடுப்பூசி, மருந்து மற்றும் இரத்தம் போன்றவற்றை வழங்குவது ஒரு பகுதியாக இருக்கும் என்று ஸ்கையி ஏர் மொபிலிட்டி COO S விஜய் மேற்கோள்காட்டிக் கூறியுள்ளார்.
முன்னர் மத்திய அரசாங்கம், ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகளை வழங்க ஸ்கை திட்டத்துடன் இணைந்து செயல்படத் தெலுங்கானா அரசாங்கத்திற்கு அனுமதி அளித்தது. மேலும் இந்த திட்டத்திற்கு உலக பொருளாதார மன்றம் நிதி ஆயோக் மற்றும் ஹெல்த்நெட் குளோபல் முதலியவையும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறது.
இந்த திட்டத்திற்கான சோதனையை நிறைவு செய்ய ஒவ்வொரு கூட்டமைப்புக்கும் ஆறு நாட்கள் கிடைக்கும், இரண்டு கூட்டமைப்பு எந்த நேரத்திலும் சோதனையைத் தொடங்க உள்ளது.
மேலும் ட்ரான்கள் சோதனையின் போது 3 கிலோவிற்கு அதிகமாகக் கொண்டுசெல்ல இயலாது என்றும் விஜய் தெரிவித்தார். சோதனைகளுக்கான முழு விமான பதிவையும் DGCA க்கு சமர்ப்பிக்க வேண்டும், ஒவ்வொரு கூட்டமைப்பும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கப் பாதுகாப்பு நிபுணர்கள் இருக்கவேண்டும் வேண்டும் விஜய் தெரிவித்தார்.
Source: Business Today