Kathir News
Begin typing your search above and press return to search.

தனிநபர்களின் ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும் - மத்திய அமைச்சர் உறுதி!

தனிநபர்களின் ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும் - மத்திய அமைச்சர் உறுதி!
X

ShivaBy : Shiva

  |  27 May 2021 10:44 AM IST

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் மத்திய அரசு புதிய நடைமுறைகளை கொண்டு வந்து இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.





இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தனிநபர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதை அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ள அதேநேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை" என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இந்தியா மேற்கொண்டுள்ள எந்த நடவடிக்கையும் வாட்ஸ்அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என்றும் சாதாரண மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் மூலம் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள், பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்களை தடுத்தல், 5 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையுடன் கூடிய பலாத்கார மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை போன்றவற்றுக்கு மட்டும் வழிகாட்டுதல்களின் 4(2) விதிமுறையின் கீழ், குறிப்பிட்ட தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டுபிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

இது போன்ற குற்றங்களுக்கான செயலை முதலில் செய்தவரை கண்டுபிடித்து தண்டிப்பதும் பொதுநலன் தான். கும்பல் தாக்குதல் போன்ற கலவரங்களில், நாம் இதை மறுக்க முடியாது. பொதுவில் ஏற்கனவே உள்ள விஷயங்கள் மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் தகவல் மூலம் பரப்பப்படுகிறது. ஆகையால், முதலில் தகவலை வெளியிட்டவரின் பங்கு மிக முக்கியம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நாட்டு மக்கள் அனைவருக்கும் தனிநபர் ரகசிய பாதுகாப்புரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேபோல், பொது ஒழுங்குக்கு தேவையான தகவலை பெறுவது மற்றும் நாட்டின் பாதுகாப்பை பாராமரிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குறியாக்கம்(encryption) அல்லது இதர தொழில்நுட்பம் அல்லது இரண்டின் மூலம் தொழில்நுட்ப தீர்வு காண்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பு'' எனவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Source: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721915

Next Story
கதிர் தொகுப்பு
Trending News