Kathir News
Begin typing your search above and press return to search.

புயல் ஏற்பட்ட போதிலும், கொரோனாவை வெற்றிகொள்ள ஆக்சிஜன் சப்ளை செய்த ஒடிசா அரசு!

புயல் ஏற்பட்ட போதிலும், கொரோனாவை வெற்றிகொள்ள ஆக்சிஜன் சப்ளை செய்த ஒடிசா அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 May 2021 5:45 PM IST

தற்பொழுது யாஸ் புயலால் ஒடிசா அரசாங்கம் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் கூட கோலா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக திரவ மருத்துவ ஆக்ஸிஜனை(LMO) தடையின்றி வழங்குவதை உறுதி செய்துள்ளது. LMO தடையின்றி வழங்கப்படுவது அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் காரணமாக மட்டுமே சாத்தியமானது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஓடிசா காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஒய்.கே.ஜெத்வா அவர்கள் கூறுகையில், "ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள், டேங்கர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், தடையற்ற ஆக்ஸிஜன் இயக்கத்தை மேம்பட்ட திட்டமிடல் செய்யப்பட்டு நிலையான இயக்க நடைமுறை தயாரிக்கப்பட்டது" என்றார்.

ஒவ்வொரு டேங்கரும் ஒடிசா காவல்துறையின் நெருக்கமான கண்காணிப்பு மற்றும் துணைப் பிரிவின் கீழ் இயக்கப்பட்டதாக அவர் கூறினார். ஒடிசா அரசாங்கத்தின் மற்றொரு மூத்த அதிகாரி, யாஸ் சூறாவளிக்கு மத்தியிலும் கூட, LMOவின் போக்குவரத்து தொடர்ந்தது என்று கூறினார்.


4 ஆக்ஸிஜன் டேங்கர்கள் அங்கூலில் இருந்து ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் 2 LMO டேங்கர்கள் ஜஜ்பூரில் இருந்து பெர்ஹாம்பூர் மற்றும் புவனேஸ்வர் வரை ஒடிசா காவல்துறையின் நெருக்கமான கண்காணிப்பு மற்றும் துணைப் பயணத்தில் செல்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஒடிசாவின் ரூர்கேலா, தெங்கனல் மற்றும் அங்குல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் மையங்கள் ஏப்ரல் 22 முதல் மே 25 வரை பல மாநிலங்களுக்கு 22,542 மெட்ரிக் டன் LMOவை வழங்கியுள்ளன. ஒடிசா ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் ஆகியவை இதனால் பலனடைந்து மாநிலங்கள் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News