Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா ஒருபொழுதும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது: இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திட்டவட்டம்!

இந்தியா ஒருபொழுதும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது: இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திட்டவட்டம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 May 2021 5:49 PM IST

இந்தியா எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது மற்றும் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் திட்டவட்டமாக தற்போது கூறியுள்ளார். இப்பொழுது ஹூவர் நிறுவனம் வழங்கிய, "இந்தியா: வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான சவால்கள்" குறித்த போர்க்களங்கள் அமர்வில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மெக்மாஸ்டருடன் உரையாடியபோது ஜெய்சங்கர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


இந்தியா பயங்கரவாதத்தை நேரடியாகவே அல்லது வேறு எந்த வடிவத்தில் வந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் S.ஜெய்சங்கர் கூறினார். எல்லையில் அமைதியைக் கடைபிடிப்பது தொடர்பான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையிலான மிகவும் சமீபத்தில் நடந்த ஒப்பந்தம் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சமாதான ஒப்பந்தம் போட்டுக் கொண்டாலும் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன என்று கூறினார்.


கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் கசப்பான சம்பவங்கள் இனியும் நடக்காதது போன்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக இரு நாட்டு ராணுவமும் தங்களுடைய எல்லை பாதுகாப்பு பிரச்சினைகளை சுமுகமான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக துப்பாக்கிச்சூடு போன்று நடத்தப் போவதில்லை என்றும், பாகிஸ்தான் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது S. ஜெய்சங்கர் கூறினார்.

எனவே, துப்பாக்கிச் சூடு நடத்தாததற்கான அடிப்படை மிகவும் தெளிவாக உள்ளது. ஏனெனில் துப்பாக்கிச் சூடுக்கான காரணம் ஊடுருவலாகும். எனவே ஊடுருவல் இல்லாவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த காரணமும் இல்லை என்று அமைச்சர் தற்போது அமெரிக்காவிற்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு அங்கமாக கலந்துகொண்ட நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News