Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனநாயகம் குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்ட இந்தியா - வெளியுறவு அமைச்சர் பெருமிதம்!

ஜனநாயகம் குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்ட இந்தியா - வெளியுறவு அமைச்சர் பெருமிதம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 May 2021 5:46 PM IST

ஹூவர் நிறுவனம் தற்போது வழங்கிய "இந்தியா: கூட்டாண்மைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்" குறித்த அமர்வில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மெக்மாஸ்டர் அவர்களுடன் உரையாடியபோது, ​​ இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் S.ஜெய்சங்கர் கீழ்க்கண்டவாறு தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். "இந்தியா கொரோனா 2வது அலையால் தற்போது மிகவும் மன அழுத்தத்தை அனுபவிக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல வகைகளில் உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் சரியாய் தெரிந்து கொள்ளாமல், உலகளாவிய அளவில் இது வேறுமாதிரி பிரதிபலிக்கின்றது" என்றும் அவர் கூறியுள்ளார்.


இத்தகைய கடுமையான சூழ்நிலையில் பல கோடி மக்கள் தங்களுடைய பாதுகாப்பையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளையும் உறுதி செய்வதில் அரசாங்கம் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றது. மேலும் இந்த நோய் தொற்றுக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார முடங்கியுள்ள நிலையில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அன்றாட உணவுகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவற்றுக்காக இந்திய அரசாங்கம் உண்மையில் இலவச உணவை வழங்குகிறது. கடந்த ஆண்டு பல மாதங்களாக வழங்கியதைப் போல் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 800 மில்லியன் மக்களுக்கு பயன்படுகிறது.


குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இரண்டரை மடங்கு அதிகமான மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது. பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளதால் சூழ்நிலையில், அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை நடத்துபவர்கள் தொழில்களில் மிகப் பெரிய தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு அந்தந்த நலச் சங்கங்கள் மூலமாக 400 மில்லியன் மக்களுக்கு வங்கியின் கணக்குகளில் பணம் செலுத்தி இருக்கிறது. இதில் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை எனக் கூறினார். இந்தியர்களான நாங்கள் எங்கள் ஜனநாயகம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியா ஒரு ஆழமான பன்மைத்துவ சமூகம் என்று அமைச்சர் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News