Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் இறந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் : மத்திய அரசின் அதிரடி உத்தரவு.!

கொரோனாவால் இறந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் : மத்திய அரசின் அதிரடி உத்தரவு.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 May 2021 1:00 PM GMT

இந்தியாவில் அதிகமாக தொற்று எண்ணிக்கைகள் காரணமாக பல குடும்பங்கள் தங்களுடைய உறவுகளை இழந்து உள்ளனர். மேலும் பல்வேறு தொழிலாளர்கள் தங்களுடைய மாதாந்திர வருமானத்தையும் பெற முடியாத ஒரு சூழ்நிலையில் உள்ளார்கள் எனவே தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் உதவ அரசாங்கம் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுந்த முடிவை தற்போது அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மேம்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட காப்பீட்டு இழப்பீடு ஆகியவற்றை அரசாங்கம் வழங்கும்.


உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனக் கூறிய பிரதமர், இந்த திட்டங்கள் மூலம், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நிதி சிக்கல்களைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மேலும் கூறினார். கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பம் கண்ணியமான வாழ்க்கை வாழவும், நல்ல வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கவும் உதவுவதற்காக, வேலையின்போது உயிரிழந்தவர்களுக்கான ESI ஓய்வூதிய திட்டத்தின் நன்மை தற்போது கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.


அத்தகைய நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள விதிமுறைகளின்படி தொழிலாளி பெற்றுவந்த சராசரி தினசரி ஊதியத்தில் 90%க்கு சமமான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். ESI திட்டத்தின் கீழ் காப்பீட்டு சலுகைகள் மேம்படுத்தப்பட்டு தாராளமயமாக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து பயனாளிகளையும் தவிர, இது குறிப்பாக கொரோனா காரணமாக உயிர் இழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவும். இந்த திட்டங்களின் விரிவான வழிகாட்டுதல்கள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News