இந்தியாவில் தற்போது வேகமாக பரவும் கொரோனாக்கு புதிய பெயர் கொடுத்து உலக சுகாதார அமைப்பு!

By : Bharathi Latha
உலக நாடுகளில் வேகமாக உருமாறி வரும் கொரோனாவிற்கு, அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு காலநிலை மாற்றங்களுக்கு மற்றும் தன் இருக்கும் இடங்களுக்கு ஏற்றவாறு அது வேறு, வேறு உருவம் எடுத்துக்கொண்டு அதிக பாதிப்புகள் பரவுகிறது.
குறிப்பாக உலகில் பிரிட்டன் போன்ற நாடுகளில் இத்தகைய கடுமையான பாதிப்புகளையும் நம்மால் பார்க்க முடிந்தது. அதே போல இந்தியாவிலும் இதே மாதிரியான தன்மைகள் உடைய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. எனினும் இதனை இந்திய வகை கொரோனா என அழைப்பது முற்றிலும் தவறானது என்று மத்திய அரசும் குறிப்பிட்டு இருந்தது.
குறிப்பாக கொரோனா என்பது ஒரு உலகளாவிய தொற்றுநோய் ஆகும். இதற்கு அந்த நாடுகளில் பெயரை சொல்லி அழைப்பது முற்றிலும் ஒரு தவறான விஷயம் மற்றும் அந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அது போன்ற குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு கடந்த மாத தொடக்கத்தில் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கண்டறியப்பட்ட B.1.617.2 எனும் கொரோனா வேரியண்ட், இனி "டெல்டா வேரியண்ட்" என அழைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
பிறகு ஆரம்பத்தில் கடந்த அக்டோபரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட B.1.617.1 எனும் கொரோனா வகை இனி "கப்பா வேரியண்ட்" என அழைக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வேன் கெர்கோவ் கூறுகையில், "முக்கியமான அறிவியல் தகவல்களை தாங்கி நிற்கும் அறிவியல் பெயர்கள் ஆராய்ச்சிகளின் தொடர்ந்து பயன்படுத்தப்படும். புதிய பெயர்கள் தற்போது இருக்கும் அறிவியல் பெயர்களை மாற்றாது" என தெரிவித்தார்.
