Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா இல்லாத கிராமம்: குறைந்த வயதுடைய கிராமத் தலைவரின் வழிகாட்டுதலால் நிகழ்ந்த அதிசயம்!

கொரோனா இல்லாத கிராமம்: குறைந்த வயதுடைய கிராமத் தலைவரின் வழிகாட்டுதலால் நிகழ்ந்த அதிசயம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Jun 2021 5:45 PM IST

மக்கள் அனைவரும் வழங்கிய முழு ஒத்துழைப்புடன் கொரோனா இல்லாத ஒரு கிராமம். அதுவும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமம் தற்பொழுது உருவாக்கியுள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரு கிராம தலைவரின் வழிகாட்டுதலால் பெயரில் இது நிகழ்ந்து உள்ளது. மஹாராஷ்டிரா உள்ள காத்னே என்ற கிராமம் கொரோனா இல்லாத கிராமமாக உருவாகி உள்ளது. 1,500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தின் தலைவரான ருத்துராஜ் தேஷ்முக் எடுத்த நடவடிக்கைகளே முக்கியம் காரணமாக கூறப்படுகிறது.


காத்னே என்ற கிராமத்தில் மிகவும் குறைந்த வயதுடைய அதாவது 21 வயதான கிராம தலைவர் ருத்துராஜ் தேஷ்முக் இதுபற்றி கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஏப்ரலில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதனால் பீதியடைந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் தங்க சென்றனர்.இதையடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன்.


நானும், என் குழுவும் சேர்ந்து ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தோம். கொரோனா பரிசோதனை செய்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், பாதிக்கப்பட்டோரை கண்டறிதல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல் போன்ற முறையாக வழிமுறைகளை பின்பற்றினோம்.

கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அவர்களின் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணித்தோம். கிராமத்திற்கு வெளியே செல்லும் நபர்களுக்கும், உள்ளே வரும் நபர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு தனிமைப் படுத்தினோம். இப்போது எங்கள் கிராமத்தில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை" இவ்வாறு அவர் கூறினார். எனவே மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த நிலை சாத்தியமே என்பது முற்றிலும் உண்மை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News