மிகவும் தேவையில் பாதிப்பில் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குமாறு மாநிலங்களிடம் மையம் பரிந்துரை!
By : Janani
தற்போது கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பாதிக்கப்பட்டவர்களும், தேவையில் இருப்பவர்களுக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை வழங்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
ஊரக மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனம் அடைந்தவர்களைக் கண்டறிந்து NFSA ரேஷன் கார்டுகளை வழங்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஜூன் 2 அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மேலும் அது தெருவில் வசிப்பவர்கள், ரிக்க்ஷா ஓட்டுபவர்கள் மற்றும் சலவை செய்பவர்கள் போன்றவர்களை அணுகுமாறும் அது கேட்டுக்கொண்டது. 'NFSA கீழ் தகுதியானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குவது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன," என்று அமைச்சகம் தெரிவித்தது.
"தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையில் கந்தர், வணிகர்கள், ரிக்க்ஷா ஓட்டுபவர்கள் மற்றும் தெருவோரம் வசிப்பவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் சிலரால் உணவு தானியங்களை வாங்குவது கடினமாக உள்ளது என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடகம் போன்றவற்றால் கண்டறியப்பட்டது. மேலும் அவர்களுக்கு முகவரி, அடையாளம் இல்லாததால் ரேஷன் கார்டு பெறுவது கடினமாக உள்ளது," என்றும் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பதினைந்து நாள் வார அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டது.
source: https://www.businesstoday.in/current/economy-politics/covid-19-impact-centre-asks-states-to-issue-ration-cards-to-needy-most-vulnerable/story/440738.html