Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பிடியிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் மும்பை மாநகரம்!

கொரோனா பிடியிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் மும்பை மாநகரம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Jun 2021 5:42 PM IST

இந்தியாவில் எப்பொழுதும் பரபரப்பாகவும் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நகரங்களில் இன்று மும்பை. மேலும் இங்கு தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் மும்பை தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதன்காரணமாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக பேருந்து சேவையும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய சதவீதத்தை வைத்து கட்டுப்பாடுகளில் தற்பொழுது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ஏறக்குறைய முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளின் அடிப்படையில் மாநிலத்தை பகுதிகளாகப் பிரித்துள்ளனர். 2, 3, 4வது பிரிவு பகுதிகளிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மும்பை 3வது பிரிவில் வருகிறது. இங்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தொற்று நோய் பாதிப்பு சதவீதம் 20 % மேல் உள்ள பகுதிகள் கடைசி பிரிவில் வருகின்றன.


முன்னதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இதுபற்றி கூறுகையில், "மராட்டியத்தில் ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படவில்லை. 3வது அலை அச்சுறுத்தல் வெகுதூரத்தில் இல்லை. எனவே தற்போது 5 வகை தளர்வுகள் செய்யப்பட்டாலும், மாநிலத்தில் எந்த இடத்திலும் பொதுமக்கள் திரளாக கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரேனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து கூடுதல் தளர்வுகள், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளூர் நிர்வாகங்கள் முடிவு எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News