Kathir News
Begin typing your search above and press return to search.

அதிக நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட தடுப்பூசி எது? ஆய்வு முடிவு என்ன?

அதிக நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட தடுப்பூசி எது? ஆய்வு முடிவு என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Jun 2021 5:44 PM IST

இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. ஆனால் இன்னும் மக்களிடையே தடுப்பூசி செலுத்துவது குறித்து பல கேள்விகளும், அச்சங்களும் மக்கள் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. மேலும் எந்தத் தடுப்பூசி எடுத்துக் கொள்வது என்பது போன்ற பல்வேறு கேள்விகளும் உள்ளன. இதற்காக தற்போது சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் இதோ, கோவாக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என ஆய்வில் முடிவுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக இத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக மேலும் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளும் ஒரு நல்ல பாதுகாப்பு அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.


தடுப்பூசிகளின் செலுத்தி கொள்வதை விரிவாக்குவதன் மூலம் நோய்த் தொற்றுகளின் 3வது அலை தவிர்க்கலாம். தடுப்பூசிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்திய மக்கள்தொகையில் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தடுப்பூசிகளில் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர். எந்தத் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் இரண்டு டோஸ்கள் முழுமையாகப் பெற்றுக் கொண்டால் மட்டும் தான் அதனுடைய முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்மால் பெற முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News