இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலை என்ன? சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகளின் முன்பு இருந்ததை விட தற்போது குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. எனவே பாதிப்புகளில் எண்ணிக்கை தற்பொழுது சற்று அதிகரித்துள்ளது. எனவே மாறி, மாறி பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்தும், குறைந்தும் வரும் காரணத்தினால் மக்களிடையே போதிய விழிப்புணர்வு தேவை என்பதை மத்திய அரசாங்கம் உணர்ந்து உள்ளது.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்து, மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து அதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிபுணர்களால் கடுமையாக முறையில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருவதாகவும் இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மக்களிடையே புதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும் மற்றும் தடுப்பூசி செலுத்துவதே உறுதி செய்வதும் இதனுடைய முக்கிய நோக்கமாகும் கருதப்படுகிறது.
