Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமத்தில் சிக்னல் பிரச்சனை.. மலை உச்சிக்கு சென்று செமஸ்டர் தேர்வு எழுதிய மிசோரம் மாணவர்கள்.!

கிராமத்தில் சிக்னல் பிரச்சனை.. மலை உச்சிக்கு சென்று செமஸ்டர் தேர்வு எழுதிய மிசோரம் மாணவர்கள்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Jun 2021 12:41 PM GMT

தற்பொழுது இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் தொற்று நோயின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் முழுவதும் ஆன்லைன் வழியாக நடைபெறுவது அனைவரும் அறிந்தது. மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து படிப்பதற்காக வருகிறார்கள். ஆனால் தற்போது இருந்து வரும் சூழலில் அவர்கள் வீட்டிலிருந்து கல்வி மேற்கொள்ளும் பொழுது அவர்கள் வசிக்கும் இடங்களில் இணைய சேவை கிடைக்காவிட்டால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். குறிப்பாக தேர்வு சமயங்களில் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுடைய மதிப்பெண்களில் அது பாதிக்கும்.


இதேபோன்று பிரச்சனையால் தான், தற்போது மிசோரம் மாநிலத்தில் கல்லூரி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு எழுத கிராமத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் மலைஉச்சிக்கு சென்று தேர்வு எழுதினர். மிசோரம் மாநிலம் ஷைஹா மாவட்டத்தில் மௌரி என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தமாக 1,700 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் 7 பேர் கிராமத்தில் இருந்து தங்களுடைய கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், அந்த மாணவர்கள் பயிலும் கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.


மௌரி மலைக்கிராமம் என்பதால் அந்த மாணவர்களுக்கு தங்கள் செல்போனில் போதிய சிக்னல் கிடைக்காமல் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு போதிய செல்போன் சிக்னல் வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த 7 மாணவர்களும் தங்கள் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சிக்கு நடந்தே சென்றனர். மலை உச்சிப்பகுதியில் போதிய சிக்னல் கிடைப்பதால் அங்கு சிறிய குடிசை போன்ற அமைப்பை உருவாக்கினர். அங்கு உச்சிக்கு சென்று ஒரு கூடாரம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த கூடாரத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி ஆன்லைன் தேர்வை எழுதி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க போதிய சிக்னல் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுவதாகவும் அரசு தங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து விடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News