Kathir News
Begin typing your search above and press return to search.

'தடுப்பூசியை வீணடிக்க வேண்டாம்' : மத்திய அரசு அறிவுறுத்தல்!

தடுப்பூசியை வீணடிக்க வேண்டாம் : மத்திய அரசு அறிவுறுத்தல்!

ParthasarathyBy : Parthasarathy

  |  12 Jun 2021 6:51 AM GMT

தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே அனைத்து மாநிலத்துக்கும் இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் தடுப்பூசியின் தேவை மற்றும் அதன் மதிப்பு தெரியாமல் தமிழகம் போன்ற மாநிலங்கள் அதை அதிகமாக வீணடிக்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது."உலகம் முழுதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், அதை வீணடிப்பதை குறைத்தால் தான் இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்" என மத்திய சுகத்தரைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மத்திய சுகத்தரைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாக்க வேண்டும் என, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது நியாயமான, மிக தேவையான, சாதிக்க கூடிய வேண்டுகோள் தான். தடுப்பூசி தயாரிப்புக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது. எனவே, பெரும்பாலான நேரங்களில், வினியோகத்தை காட்டிலும், தேவை அதிகமாக உள்ளது.

கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வர வேண்டுமானால் தடுப்பூசி என்ற ஆயுதத்தை நியாயமாகவும், உகந்ததாகவும் நாம் பயன்படுத்த வேண்டும். உலக அளவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், அவை வீணாவதை குறைப்பதன் வாயிலாக இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்." என்று அதில் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News