ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதாக வந்ததி பரப்பிய பிரபல சர்வதேச பத்திரிகை..!

By : Muruganandham
அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதாக பிரபல சர்வதேச பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்று யூகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இன்றி தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இதுவாகும்.
உயிரிழப்புகள் குறித்து அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டவை அல்ல. விர்ஜினியா காமல்வெல்த் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டோபர் லாஃப்பெர் செய்ததாக கூறப்படும் ஆய்வு குறித்த தகவல்கள் அறிவியல் தரவுதளங்களான பப்மெட் மற்றும் ரிசர்ச் கேட் உள்ளிட்டவற்றில் இல்லை. மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட முறை குறித்து பத்திரிகையில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
காப்பீட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் தெலங்கானாவில் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆய்வு குறித்தும் சரியான தகவல்கள் இல்லை.
தினசரி இறப்பு எண்ணிக்கையை மாவட்ட அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சரியான எண்ணிக்கை பதிவாக வேண்டும் என்று அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கும் மாநிலங்களின் தரவுகளை சரிபார்க்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டன.
கொவிட் இறப்புகள் குறித்த தகவல்களை பதிவு செய்வது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். நன்கு நிறுவப்பட்ட, சரியான மற்றும் வலுவான முறையில் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அதே போல, போதிய சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதிலும், கிராமப்புறங்களில் பேரிடரின் அளவை கணக்கிடுவதிலும் இந்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும், பெருந்தொற்றின் போது 'கிராமப்புற இந்தியா மறைக்கப்பட்டுள்ளதாகவும்' சில செய்திகள் தெரிவிக்கின்றன.
கிராமப்புறங்களில் கொவிட்-19 மேலாண்மையில் இந்திய அரசு துடிப்புடன் பணியாற்றி வருகிறது. பல்முனை சுகாதார உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாநிலங்களின் சிறப்பான பங்களிப்புடன் பொது சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊரகப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் அரசு சுகாதார வசதிகள் உள்ளன. 2020 மார்ச் 30 படி, 1,55,404 துணை சுகாதார மையங்களும், 24,918 ஆரம்ப சுகாதார மையங்களும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்தன. 5,895 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மயங்கள் செயல்பட்டு வருகின்றன.
கூடுதலாக, 2018 ஏப்ரலில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் இந்தியாவின் பொது சுகாதார வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளன. இது நாள் வரை, 75,995 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு மாவட்டங்களின் கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் நோய் பரவலை கருத்தில் கொண்டு, "புறநகர், ஊரக மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் கொவிட்-19 கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை" 2021 மே 16 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது.
