கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்குமா? சிறப்புக் குழுவின் அறிக்கை!

By : Bharathi Latha
உலகளவில் தோன்றியுள்ள வைரஸ் தொற்று தற்போது பல மாதிரியான உருமாறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பரவலாக அறியப்படுகிறது. அந்த வகையில், அடுத்து வரும் அலையில் குழந்தைகளை இந்த வைரஸ் கடுமையாகத் தாக்கும் என்பது அனைத்து மக்களின் பயமாக இருந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை உறுதியாக கூறுவதற்கான அறிகுறிகள் தற்போது வரை இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனா 3வது அலை உருவாகும் என்றும், அப்போது வைரஸ் மேலும் மாற்றம் அடைவதால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்றும் பரவலாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கண்காணிக்கும் சிறப்பு குழு ஒன்று தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது என்னவென்றால், கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுவதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று குழந்தைகள் மருத்துவர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே இச்சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை. 3வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது வரை இல்லை.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், மிக லேசான அறிகுறிகளே தென்படும். சாதாரண காய்ச்சல், சளி போல வந்து சரியாகி விடும்.கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. தொற்று பாதிப்பால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும், குறைவாகவே உள்ளது.'ஸ்மார்ட் போன்'கொரோனா பரவல் காரணமாக, குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
